Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை, கும்பகோணம் - 612302, தஞ்சாவூர் .
Arulmigu Swaminatha Swamy Temple, Swamimalai, Kumbakonam - 612302, Thanjavur District [TM018002]
×
Temple History

தல பெருமை

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து மேற்கே 6 கி.மீ தொலைவில் சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு ஆகும். தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உபதேசித்த பிரசித்தி பெற்ற தலமாகும்.

இலக்கிய பின்புலம்

பதிகம் (பாடல்கள்) திருமுருகாற்றுப்படை நக்கீரர் அருளிய 317 வரிகளை கொண்ட திருமுறுகாற்றுப்படை நூலில் முருவேளின் ஆறு திருத்தலங்கள் போற்றப்படுகின்னறன. இதில் நான்காவதாக வருவது திருஏரகம். இதுவே சுவாமிமலை ஆகும். இந்நூலில் பதின்மூன்று வரிகள் திருஏரகம் பற்றி பேசுகின்றன.திருஏரகத்தின் தலச்சிறப்பும் இங்குள்ள ஆதி சைவர்களின் தூய நடத்தையும், பூசனைச் சிறப்பும் இதில் காட்டப்படுகின்றன. திருப்புகழ் கி.பி.பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாத சுவாமிகள் 16000 திருப்புகழ் பாடல்களை பாடினார். அவற்றுள் இத்தலம் பற்றி 38 திருப்புகழ் பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன. திருஎழுக்கூற்றிருக்கை அருணகிரிநாத சுவாமிகள் சுவாமிநாத பெருமாள் மீது பாடியுள்ள இப்பாடல் திருப்புகழின் சாரம் என்று போற்றப்படுகிறது. இது சித்திரக்கவியாகும். தேர் வடிவில் இது அமைந்துள்ளதால் இதனை...