தலச்சிறப்பு முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் இது நான்காவது படைவீடாகும். தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உபதேசித்த பிரசித்தி பெற்ற தலமாகும். இந்த முருகப்பெருமான் அலங்காரச் சிறப்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. விபூதி அபிஷேகம் செய்யும்போது அருள் பழுத்த ஞானியாகக் காட்சி தருவார். சந்தன அபிஷேகம் செய்யப்பட்ட நிலையில் பாலசுப்ரமணியனாக கம்பீரமாகக் காட்சி தருவார். கருவறையைக் கூர்ந்து பார்த்தால் சுவாமிநாதசுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன் மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாதமூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சி தருவது தெரியும். இதிலிருந்து சிவனும் முருகனும் வேறு வேறு அல்லர் என்பது புலனாகும்....